பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதிய கோர விபத்தில் 30 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலம் கராச்சியில் இருந்து பஞ்சாப் நோக்கி பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான பயணிகளுடன் சென்ற அந்த இரயில் ரோஹ்ரி நகர் அருகே காந்த்ரா என்ற இடத்தில் வந்தபோது, அதேசமயம் ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கை ஒரு பேருந்து கடந்து செல்ல முயன்றது. அப்போது அந்த ரயில் பேருந்தின் மீது மிகவும் வேகமாக மோதியது. இதில் பேருந்து சின்னா பின்னமாக நொறுங்கிவிட்டது.
இந்த கோர விபத்தில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.