உலக சுகாதார அமைப்பு பிரிட்டானியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உரு மாறிய கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டானியாவில் உரு மாற்றம் அடைந்துள்ள புதிய வகையான வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், பிரித்தானியாவில் VOC 202012/01 என அழைக்கப்படும் புதிய வகை வைரஸ் முன்பிருந்த வைரஸ்களை விட மிகவும் எளிதாக பரவும் என்றும் 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது.
கடந்த ஒரு மாதத்தில் 70 நாடுகளுக்கும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 10 நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதேபோல் தென்னாப்பிரிக்காவில் 501 Y.Y2 என்ற உருமாறிய வைரஸ் கடந்த ஒரு மாதத்தில் 31 நாடுகளுக்கு பரவியுள்ளது என்று தெரிவித்துள்ளது.