Categories
உலக செய்திகள்

“எங்களுக்கு இந்த தடுப்பூசி வேண்டாம்”… பிரபல நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தடை… 5 நாடுகள் எடுத்த முக்கிய முடிவு…!!

அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிக்கு 5 நாடுகள் தடை விதித்துள்ளது.

உலகில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. உலக நாடுகள் அனைத்தும்  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திய பின்பு ரத்த உறைவு ஏற்பட்டது என்று புகார்கள் எழுந்துள்ளது. இதனால் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து  போன்ற நாடுகள் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின்  தடுப்பூசியை  தடை செய்தது.

எனினும் இந்த தடுப்பு ஊசி பாதுகாப்பானது தான் என்று அஸ்ட்ராஜெனேகா  நிறுவன அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக இத்தாலி வெளியிட்ட அறிக்கையில் மற்ற ஐரோப்பிய நாடுகள் இந்த விஷயத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு நாங்களும் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியதாவது, ” எங்கள் நாட்டில் 57 வயதான ஆசிரியர் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை இந்த நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்தினோம். ஆனால் அவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் உயிரிழந்துள்ளார். எனவே முன்னெச்சரிக்கை காரணமாக தான் இந்த நிறுவனத்தின் தடுப்பூசியை தடை செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் வெளியிட்டுள்ள  அறிக்கையில், ” பல நாடுகளில் உள்ள 17 மில்லியனுக்கு அதிகமாக மக்களுக்கு எங்கள் நிறுவன தயாரிப்பான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் ரத்தம் உறைதல் என்ற பிரச்சினையால் 37 புகார்கள் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த தடுப்பூசி ரத்தம் உறைதல் பிரச்சனையை அதிகப்படுத்துகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Categories

Tech |