கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
சிலருக்கு சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் யோகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். சிலருக்கு அரசு வழியில் அனுகூலம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.