துலாம் ராசி அன்பர்களே..!
இன்று சொந்த பிரச்சனையை பிறரிடம் சொல்ல வேண்டாம்.
ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். பணிகள் நிறைவேற கூடுதல் முயற்சிகள் அவசியம். தொழில் வியாபாரத்தில் படிப்படியாக வளர்ச்சி ஏற்படும். அளவான பணவரவு காணப்படும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இன்று புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். தொழிலில் உள்ளவர்கள் நிதானப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும். இன்று பணம் சேர்த்தல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டு உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்திக் கொள்ளுங்கள். சிவபெருமான் வழிபாடு மனதிற்கு நிம்மதியைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.