சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் குறைந்துக் காணப்படும். எனவே நீங்கள் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
பணியிடத்தில் இன்று அதிக பொறுப்புகள் காணப்படும். உங்களின் மேல் அதிகாரிகளுடன் விரும்பத்தகாத தருணங்களை மேற்க்கொள்ள நேரலாம். நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது. இன்று உங்களின் துணையுடன் வெளிப்படையாகவும், நட்புடனும் பழகவேண்டும். இன்று பணவரவிற்கு உகந்த நாளல்ல. இன்று திட்டமிட்டு பணத்தை கையாள்வதன் மூலம் பணயிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். இன்று உங்களின் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். இன்று வயிற்றுவலி மற்றும் அஜீரண கோளாறுகளால் பாதிப்பு ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: கரும்பச்சை நிறம்.