விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் மிகவும் சந்தோஷம் மிக்க நாளாக அமையும்.
பெண்கள் விருப்பப்படி அவர் விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும்.அரசு பதவியில் உள்ளவர்களுக்கு ஆணையிடும் அதிகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் நடக்கும். பணவரவு மனதிற்கு திருப்தியைக் கொடுக்கும். புதிய நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். அவர்களின் நட்பு உங்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கும். எதிலும் இன்று முன்னேற்றம் அடைவார் என்று சொல்லலாம். விருச்சிக ராசி நேயர்களுக்கு பங்குச் சந்தையில் இன்று நல்ல லாபம் இருக்கு. நல்ல பங்குகளின் அறிகுறி கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்ல வெற்றிகரமாக நடந்து முடியும்.
வாகனங்களை பயன்படுத்தும் பொழுதும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு எந்த விதத்திலும் முன்னேற்றம் இருக்கும். மேற்கல்வி காண முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். விளையாட்டுத் துறையிலும் நல்ல வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். இன்று ஆதாயம் தரும் பதவிகள் இல்லம் தேடி வரக்கூடும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி பொங்கும் நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.
இந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அது மட்டும் இல்லாமல் இந்த சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்தாள் வெற்றி வாய்ப்புகள் கூடும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: கிழக்கு, அதிர்ஷ்ட எண்: ஆறு மற்றும் 7, அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.