கன்னி ராசி அன்பர்களே..!
இன்று மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். ஆன்மீக யாத்திரைக்கு இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனால் சுய விழிப்புணர்வு ஏற்படும். பணியிடத்தில் மிதமான வளர்ச்சி காணப்படும். பணிகள் அதிகமாக காணப்படும். அதற்கு உங்களின் நேரம் செலவாகும். உங்களின் சக பணியாளர்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்று உங்களின் துணையிடம் பேசுவதில் தயக்கம் காணப்படும். எனவே உங்களின் துணையிடம் வெளிப்படையாகவும் நட்பான முறையிலும் பழகவேண்டும். இன்று வரவு செலவு என்று இரண்டும் கலந்தே காணப்படும். இன்று உங்களின் வங்கியில் சேமிப்பை பராமரிக்க முடியாது. உங்களின் தாயின் உடல் நலனுக்காக பணம் செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீல நிறம்.