ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தநிலை இருந்தாலும் எடுக்கும் முயற்சிகளில் எப்படியாவது வெற்றியை பெற்று விடுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் லாபம் காணமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலை பளுவும் சற்று அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.