தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு சிறப்பான பணவரவு உண்டாகும் வாய்ப்புள்ளது.
வியாபாரம் மற்றும் தொழிலில் பலவகையில் லாபகரமான பலன்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் ஓரளவிற்கு நிவர்த்தியாகும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.