Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! காரியங்கள் கைகூடும்..! பொறுமை தேவை..!!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு பண வரவை கொஞ்சம் தாமதமாகவே வரும்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் அதிக முயற்சி எடுப்பீர்கள். அனைத்து விஷயங்களுக்கும் நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். சில நபர்கள் உங்களுக்கு தொந்தரவு கொடுத்தாலும் நீங்கள் அதை சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் யோசித்து செயல்படுவது சிறந்தது. சில நபர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். அவர்களை நீங்கள் சாமர்த்தியமாக சமாளிக்க வேண்டும். தர்மசங்கடத்திற்கு ஆளாக வேண்டிய சூழலும் உள்ளது. இன்று நீங்கள் எந்த ஒரு பிரச்சினையையும் துணிச்சலாக எதிர்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவீர்கள். உங்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உள்ளது. பதவி உயர்வு ரீதியாகவும் முன்னேற்றம் உள்ளது. சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகளும் உங்களுக்கு வந்து சேரும். இன்று உங்களுக்கு அனைவரும் ஆதரவாகவே இருப்பார்கள். பெண்களுக்கு அவ்வப்பொழுது ஞாபகத்திறன் மட்டும் கம்மியாக இருக்கும். ஆபரணங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். இன்று காதலில் உள்ளவர்களுக்கு சிரமம் தீர்ந்துவிடும்.
மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்டமான நிறம் இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |