மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக காணப்படும் எனவே திட்டமிட்ட அணுகுமுறை தேவை.
அனைத்து விஷயங்களையும் எளிதாக எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
பணி விஷயமாக சிறிய பயணம் மேற்கொள்வீர்கள். உறவில் நல்லிணக்கத்தை தக்கவைத்துக்கொள்ள உங்கள் துணையுடன் கண்ணியமான அன்பான வார்த்தைகளால் நீங்கள் பேச வேண்டும். இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது குறைந்த அளவே பணம் காணப்படும். பணம் சேமிப்பது கடினமாகவே இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் ஒருநிலைப்படும்.
மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
நண்பர்களிடத்தில் கூட்டு சேர்ந்து படிப்பதன் மூலம் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்வீர்கள்.
இன்று நீங்கள் சிவன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 6. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.