துலாம் ராசி அன்பர்களே…! பொறுமையுடனும் உறுதியுடனும் செயல்படவேண்டும்.
விரைவான அணுகுமுறையை தவிர்க்க வேண்டும். உங்களின் இலக்குகளை அமைத்து கொள்ளும் யுக்தி உண்டாகும். பணிகள் இன்று அதிகமாக இருக்கும். சவால்கள் நிறைந்து காணப்படும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு இன்மை காரணமாக சோர்வு உண்டாகும். சில சமயங்களில் உணர்ச்சிவசம் உண்டாகும். உங்களின் துணையிடம் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். அமைதியாக இருக்க வேண்டும். ஏமாற்றம் உண்டாகும். துலாம் ராசி அன்பர்களே நிதிநிலையை பார்க்கும்பொழுது சீராக இருக்காது. தேவையில்லாத செலவுகள் ஏற்படும். வரவு செலவுகள் கலந்து காணப்படும். துலாம் இராசி அன்பர்களின் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது ஆரோக்கியக் குறைவு காணப்படும். ஆற்றல் குறைந்து காணப்படும். தலைவலி ஏற்படும். அமைதியான அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது. மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். துலாம் ராசி அன்பர்கள் விநாயகரை வழிபடுவது நல்லது. உங்களின் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 4. அதிர்ஷ்டமான நிறம் பிரவுன் நிறம்.