மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சாதகமான நாடாக இருக்காது.
இன்று உங்களுக்கு எதையோ இழந்தது போன்ற எண்ணம் ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். பணியில் திட்டமிட்டு செயல்படவேண்டும். மகிழ்ச்சியின்மை காரணமாக இன்று உங்களின் துணையுடன் குறைந்த புரிந்துணர்வு காணப்படும். உங்களின் மனநிலையை மாற்றிக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். இன்று நீங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும். பண இழப்பை சந்திக்க நேரலாம். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். உங்களின் நிதிவளர்ச்சி குறைந்தே காணப்படும். தூக்கமின்மை மற்றும் பதட்டம் காரணமாக இன்று கால்வலி ஏற்படும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் கூட்டுச்சேர்ந்து படிப்பது நல்லது. இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.