விருச்சிகம் ராசி அன்பர்களே…! ஆன்மீக ஈடுபாடு ஆறுதலைக் கொடுக்கும்.
புத்திசாலித்தனமாக யோசிப்பது சிறந்த பலனை கொடுக்கும். பணியில் வளர்ச்சிக்கான உகந்த நாள் அல்ல. உங்களின் திறமையை குறைக்கும் வகையில் சில தடைகள் இருக்கும். உங்களின் துணையுடன் மிகுந்த உணர்ச்சிவசப்படுவீர்கள். சகஜமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். விருச்சிக ராசியின் நிதிநிலை சிறப்பாக இருக்காது. ஆன்மீக நோக்கத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். வரவும் செலவும் இரண்டும் கலந்து இருக்கும்.ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது அதிக நீரை பருகு வீர்கள். வயிற்று உப்புசம் அஜீரண கோளாறு உண்டாகும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை கொடுக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 3. அதிர்ஷ்டமான நிறம் நீல நிறம்.