Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! சுறுசுறுப்பாக இருப்பீர்கள்…! நினைத்தது நிறைவேறும்…!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களின் ராசிக்கு, நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாளாக இருக்கும்.

தொழில் ரீதியாக இலாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் இருந்தாலும் பெரிய கெடுதல் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. குரு வக்ரகதியில் இருப்பதால், தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் புதிய பொருள் சேரும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.

Categories

Tech |