மேஷம் ராசி அன்பர்களே…! இன்று நிலத்தில் அக்கறை கொள்ளும் நாளாக இருக்கும்.
அதிக உழைப்பின் காரணமாக தூக்கம் கொஞ்சம் குறையும். உடல் நலம் கெடும். வியாபாரம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் வந்து சேரும். குழந்தைகளை சரியாக புரிந்துகொண்டு நடக்க வேண்டும். இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். சாமர்த்தியமான பேச்சு வெளிப்படும். காரிய வெற்றி உண்டாகும்.
பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் வேண்டும். வாக்குவாதம் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பிரச்சனை இல்லை. சரியான உணவை எடுக்க வேண்டும்.குலதெய்வத்தை மனதில் நினைத்து என்ற காரியங்களை செய்து வந்தால் முன்னேற்றம் உண்டாகும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசரம் எதிலும் காட்ட வேண்டாம்.
மாணவ கண்மணிகளுக்கு ஆர்வம் ஓரளவே இருக்கும்.முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். சக மாணவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
திங்கட் கிழமை என்பதால் சிவபெருமானுக்கு வழிபட்டு சிறிதளவு தயிர் சாதத்தை காக்கைக்கு அன்னம் வைத்து வாருங்கள். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மட்டும் இளம் மஞ்சள் நிறம்.