Categories
உலக செய்திகள்

அமேசானில் ஆர்டர் செய்யப்பட்ட நெக்லஸ்…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஆயுசுக்கும் மறக்கமுடியாத சம்பவம்….!!

கனடிய இளம்பெண் ஒருவர் அமேசான் மூலம் ஆர்டர் செய்த நெக்லஸ்னுள் அவரால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவிற்கு பொருள் ஒன்று இருந்துள்ளது.

கன்னட நாட்டின் nadine roy என்னும் இளம்பெண் அமேசான் நிறுவனத்தின் மூலம் தனது பாட்டியின் அஸ்தியை உள்ளே வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நெக்லஸ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதன்பின் Nadine னிடம் அவர் ஆர்டர் செய்த அந்த நெக்லஸ் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து டெலிவரி செய்யப்பட்ட அந்த நெக்லஸை மிகுந்த ஆரவாரத்துடன் வாங்கிய Nadine அதற்குள் தன்னுடைய பாட்டின் அஸ்தியை வைப்பதற்காக திறந்து பார்த்த அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது அந்த நெக்லஸ்ஸிற்குள் வேறு யாருடைய அஸ்தியோ இருந்துள்ளது.

அதன்பின் அவர் அந்த நெக்லஸை கொண்டு சுடுகாட்டிலுள்ள ஒரு மரத்தில் கட்டியுள்ளார். இச்சம்பவம் அவரால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது.

Categories

Tech |