கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்ஸ்டாகிராம் மூலம் பயனர்களுக்கு உணவு ஆர்டர் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது
கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் கொரோனாவை கட்டுப்படுத்துவது ஒன்றே தீர்வாகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். பொதுமக்களில் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதில் கூட சிக்கல் எழுந்துள்ளதால், இன்ஸ்டாகிராம் தங்களின் பயனாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் பிரத்தியேக வசதியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்த முறையில் வாடிக்கையளர்கள் உணவை ஆர்டர் செய்யும் வகையில் இந்த புதிய வடிவமைப்பை இன்ஸ்டாகிராம் தனது செயலில் வடிவமைத்துள்ளது. இதனை தொடர்ந்து லண்டனில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள இன்ஸ்டாகிராம் உலகளவிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான பிரத்யேக ஸ்டிக்கர்ஸ், பொத்தான்களை செயலில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.