Categories
மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தல் – டிசம்பர் 21, 22ல் ஆலோசனை…!!

சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து டிசம்பர் 21, 22ல் ஆலோசனை நடத்த இருப்பதாக இந்திய தேர்தல் ஆணைய செயலர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல்களை விட வரும் சட்டமன்ற தேர்தல் எதிர்பார்ப்புடனும், சுவாரசியமாகவும் இருக்க போகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் பிரபல சினிமா நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் கட்சியின் இணைந்துள்ளனர். இதை அடுத்து பிரபல நடிகர் பார்த்திபனும் கட்சியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்ஹா டிசம்பர் 21 இல் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும், 22 இல் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக்குப் பின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிள் மனுக்களை பெறுவார்கள்.

Categories

Tech |