பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்போருக்கு ரூபாய் 15 லட்சம் மதிப்பில் பரிசுத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் ஆகச்சிறந்த ஆசை 2020க்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும். அதேபோல் இந்தியாவில் படித்து முடித்துவிட்டு வெளியே வரும் இளைஞர்கள் புதுப்புது சிந்தனைகளுடன் இந்தியாவிற்கு உதவும் வகையில் பல புதிய கண்டுபிடிப்புகளை படைத்து இந்தியாவை சாதனை மிக்க நாடாக மாற்ற வேண்டும் என்பதே.
தற்போது ஐயாவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் போட்டி ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. கனவு காணும் துணிச்சல் என்ற தலைப்பில் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில் இந்த போட்டியானது அமைக்கப்பட்டுள்ளது. இதில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும், அதை வடிவமைக்கும் தனிநபருக்கு ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.