செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமஸ்கிருதம் தான் எல்லா மொழிக்கும் மூத்தது என பேசிக் கொண்டிருக்கக் கூடாது. உலக பேரறிஞர் மொழிகள் ஆய்வு அறிஞர்களே சொல்கிறார்கள், மனிதன் பேசிய முதல் மொழி தமிழ் என்று.. அமெரிக்காவின் மொழியியல் ஆய்வறிஞர் சொல்கிறார். மொழி தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆகிறது. ஆனால் என் மொழி தோன்றியதற்கு இன்னும் வேர் கண்டுபிடிக்க முடியவில்லை.
தமிழ் அறிஞர்கள் ஐம்பதாயிரம் என்கிறார்கள், சிலர் 25,000 என்கிறார்கள், 3 லட்சம் ஆண்டு என்கிறார்கள், எப்படியோ இருக்கட்டும். பிற மொழியில் துணை இன்றி, பிறமொழிச் சொற்கள் இன்றி, கலப்பின்றி தனித்து இயங்கக்கூடிய பேராற்றல் கொண்ட உலக மொழி, உயர் தனித்த மொழி, எங்கள் மொழி தமிழ் மொழி. அவரவர் தாய்மொழியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அந்த மொழிகளின் தாய் மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோம்.
அவ்வளவு பெருமைக்குரிய மொழி இனத்தின் பிள்ளைகள் நாங்கள், அதனால் இது என்னுடைய உரிமை . நான் என் இறைவன் கிட்ட தான் பேச வேண்டும் என்று நினைக்கிறேன், நீங்கள் உடனே பள்ளி வாசலில் போய் கேட்பீர்களா? தேவாலயத்தில் போய் கேட்பீர்களா? என்று கேட்பார்கள். நான் கேட்பதை சொல்லுங்கள். அது என் சமயமா ? அது ஐரோப்பிய மதம், இன்னொன்று அரேபிய மதம். இது என் சமயம், சைவம் என் இறை. என் இறைக்கு என் மொழியில் வழிபாடு நடத்துங்க என தெரிவித்தார்.