நேற்று நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் முகமது ஹூசாமுதீன் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார் .
துபாயில் நேற்று தொடங்கப்பட்ட ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது ,வரும் 31ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா ,கஜகஸ்தான் உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று முதல் நாளில் நடைபெற்ற போட்டியில், ஆண்களுக்கான (65 கிலோ) எடை பிரிவில் போட்டி நடந்தது .
இதில் இந்திய வீரரான முகமது ஹூசாமுதீன்,கஜகஸ்தான் ,வீரரான 19 வயதான மக்முத் சபிர்கானுடன் மோதி, 5-0 என்ற கணக்கில் முகமது ஹூசாமுதீன் வெற்றி பெற்று கால்இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.இந்த போட்டியில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர் ,என்பது குறிப்பிடத்தக்கது .