ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இந்த போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான (91 கிலோ) எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில் , இந்திய வீரர் சஞ்சீத் ,ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற கஜகஸ்தான் வீரரான வாசிலி லிவிட்டை , 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். இதுபோல் (52 கிலோ) எடை பிரிவுக்கான இறுதிப்போட்டியில் , நடப்புச் சாம்பியனான இந்திய வீரர் அமித் பன்ஹால் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தான் வீரர் ஷகோபிடின் ஜோய்ரோவிடம் மோதி, 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.
இந்த முடிவுக்கு எதிராக இந்திய அணி தரப்பிலிருந்து செய்யப்பட்ட அப்பீல் நிராகரிக்கப்பட்டது . (64 கிலோ ) எடை பிரிவின் இறுதிப்போட்டியில் ,இந்திய வீரரான ஷிவ தபா , மங்கோலியா வீரர் பாதர்சுக் சின்ஜோரிக்கிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து ,வெள்ளிப்பதக்கத்துடன் திரும்பினார் . இதன் மூலம் ஷிவ தபா தொடர்ந்து 5-வது பதக்கதை வென்றுள்ளார் .இந்த போட்டியில் மொத்தமாக இந்தியா 15 பதக்கங்களை வென்றுள்ளது.