ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நேற்று நடந்த இந்தியா -தென்கொரியா அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது .
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்கொரிய அணியுடன் மோதியது. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில்4-வது நிமிடத்தில் இந்திய அணியில் உபாத்யாய் முதல் கோல் அடித்தார் . இதன்பிறகு 18-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார் . இதனால் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது .
இதையடுத்து 41-வது நிமிடத்தில் தென்கொரிய அணியில் ஜோங்யுன் ஜாங்கும் மற்றும் 46-வது நிமிடத்தில் சுங்யுன் கிம்மும் கோல் அடித்தனர் .இதனால் இந்திய அணி பெனால்டி கார்டன் உட்பட பல கோல் அடிக்கும் வாய்ப்புகளை தவற விட்டது. இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது .இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி என்பதால் இதில் வெற்றி பெறும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து ஜப்பான்- பாகிஸ்தான் அணிகள் மோதின போட்டி டிராவில் முடிந்தது.