ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது .
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணி தரப்பில் ஹர்மன்பிரித் சிங் 2 கோல், ஆகாஷ்தீப் சிங் ஒரு கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.