Categories
உலக செய்திகள்

OMG….! ஹாலிவுட் நடிகை மீது இனவெறி தாக்குதல்…. பரபரப்பில் பிரபல நாடு….!!!

அமெரிக்காவில் பிரபல நடிகை தன் மீது நடத்திய தாக்குதல் குறித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் பல காலமாகவே நடைபெற்று வரும் இனவெறி தாக்குதல் கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய அமெரிக்கர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில்  ‘தி பாய்ஸ்’ மற்றும் ‘சூசைடு ஸ்க்வாடு’  ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ஹாலிவுட் நடிகை கரென் புகுஹரா. இவர் ஜப்பான் வம்சாவளியை சேர்ந்தவர். இந்த நிலையில் இவர் மீது சமீபத்தில் இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து நடிகை தனது மீது இனவெறி தாக்குதல் நடத்தியது குறித்து இணையதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் “ஆசிய இனவெறியை நிறுத்துங்கள்” என்ற ஹேஷ்டேக்குடன், தான் ஒரு ஹோட்டலில் இருந்து வெளியே வந்தேன். அப்போது எனது தலையில் தாக்கி தனது இனத்தை இழிவுபடுத்தி பேசினார். மேலும் நடிகை எனது மீது கடந்த காலங்களில் இனரீதியான அவதூறுகள் மற்றும் துன்புறுத்தும் செயல்கள் நடந்து இருக்கிறது. ஆனால் உடல் ரீதியாக பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை. பெண்கள், ஆசிய வம்சாவழியினர் மற்றும் முதியவர்களுக்கு உதவி தேவை” என்று தெரிவித்துள்ளார்

Categories

Tech |