Categories
விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை : மகளிர் ஹாக்கி போட்டி இன்று முதல் ஆரம்பம் ….!!!

6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி ஹாக்கி போட்டி இன்று முதல் தொடங்குகிறது.

6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி தென் ஆப்பிரிக்காவில் டாங்கே நகரில் இன்று தொடங்குகிறது. இப்போட்டி இன்று முதல் தொடங்கி வருகின்ற 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது .இப்போட்டியில்  நடப்பு சாம்பியன் தென்னாப்பிரிக்கா,  ஜப்பான் ,இந்தியா ,மலேசியா மற்றும் சீனா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன .இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இதில் லீக் சுற்று முடிவில் முதல் 2  இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதன்படி இன்று நடைபெறும் சவிதா தலைமையிலான இந்திய மகளிர் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியுடன் மோதுகிறது டோக்கியோ ஒலிம்பிக்கில் 4-வது இடம் பிடித்த இந்திய அணி இதன்பிறகு பங்கேற்கும் முதல் போட்டி என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Categories

Tech |