இந்தியா, பாகிஸ்தான், காங்காங், ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்ற ஆசிய கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 20 ஓவராக நடைபெற்ற இந்த போட்டி குரூப் எ, குரூப் பி என்று இரு சுற்றுங்களாக நடந்து முடிந்தன. ஒவ்வொரு சுற்றிலும் இரண்டு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தேர்வாகின. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும் பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்காவும் சூப்பர் 4 சுற்றில் மோதிய நிலையில் 3 போட்டி விளையாடி,
வெளியேறிய இந்தியா – ஆப்கானிஸ்தான்:
மூன்றிலும் வெற்றிபெற்ற ஸ்ரீலங்கா முதலிடத்திலும், இரண்டு போட்டிகள் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும் இடம்பெற்று, இரு அணிகளும் பைனல் சென்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான் தொடரை விட்டு வெளியேறிய நிலையில், பாகிஸ்தான் vs ஸ்ரீலங்கா அணிகள் மோதிய இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
டாஸ்:
துபாய் இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட் செய்ய, முதல் ஓவரிலே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நசீம் ஷா வீசிய 3ஆவது பந்தில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குசல் மெண்டிஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஸ்ரீலங்கா 170 ரன்கள்:
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 58 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறிக் கொண்டிருந்த நேரத்தில், தனஞ்சயா டீ சில்வா, பனுகா ராஜபக்சே, வனிந்து ஹசரங்க அணியை மீட்டு எடுத்தனர். அதிகபட்சமாக ராஜபக்சே 71 ரன் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து அசத்தியது.
ரிஸ்வான் அரைசதம்:
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டும், நசீம் ஷா, ஷதாப் கான், இப்திகார் அகமது ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினார்.பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் அசத்தலான அரைசதம் அடிக்க, இப்திகார் அகமது 32 ரன்கள் அடிக்க, ஏனைய வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது.
பாகிஸ்தான் தோல்வி:
இறுதியாக 20 ஓவர் எதிர்கொண்ட பாகிஸ்தான அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தால் 23 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி அசத்தல் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் ஸ்ரீலங்கா அணி சார்பில், பிரமோத் மதுஷன் 4 விக்கெட்டும், வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டும், சாமிக்க கருணாரத்ன 2விக்கெட்டும், மகேஷ் தீக்ஷனா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 6 வது முறையாக ஆசியக் கோப்பையை வென்று தன்வசப் படுத்தியுள்ளது.
ஸ்கோர் போர்டு: ஸ்ரீலங்கா பேட்டிங்:
ஸ்கோர் போர்டு: பாகிஸ்தான் பௌலிங்:
ஸ்கோர் போர்டு: பாகிஸ்தான் பேட்டிங்:
ஸ்கோர் போர்டு: ஸ்ரீலங்கா பௌலிங்: