ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
2022 ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான நான்காவது லீக் போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரிசப் பண்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 68* ரன்களும், விராட் கோலி 44 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 59* ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.. மேலும் கே எல் ராகுல் 36 ரன்கள் எடுத்தார்..
இதையடுத்து களமிறங்கி ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 152 ரன்கள் எடுத்து தோற்றது. அதிகபட்சமாக பாபர் ஹயாத் 35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 41 ரன்களும், கிஞ்சித் ஷா 30(28) ரன்களும் எடுத்தனர். மேலும் ஜீஷன் அலி 26* (17) ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றது.