Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : ஷபாலி, மந்தனா அபாரம்…. 100 ரன்னில் சுருண்ட வங்கதேசம்…. இந்தியா அசத்தல் வெற்றி.!!

ஆசியக்கோப்பை லீக் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் மகளிர் வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய அணி.

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த 7 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதவேண்டும்.. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். சில்கெட்டில் நேற்று நடந்த முதல் லீக்போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்தது.

இந்நிலையில் இன்று இரண்டாவது லீக் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டது இந்தியா. இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆடவில்லை. அவருக்கு பதில் ஸ்மிருதி மந்தனா கேப்டன் பொறுப்பேற்றார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் சிறப்பாக ஆடினர். அதன்பின் ஸ்மிருதி மந்தனா 47 (38) ரன்களில் ஆட்டம் இழந்தார். அதனைத் தொடர்ந்து அரைசதம் அடித்து சிறப்பாக அடிய ஷபாலி வர்மாவும் 44 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த ஜெமிமா சிறப்பாக ஆடினார்..

அதேசமயம் ரிச்சா கோஷ் 4, கிரண் நவ்கிரே 0, தீப்தி சர்மா 10 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 159 ரன்கள் குவித்தது. ஜெமிமா 35 ரன்களுடனும், பூஜா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்..

இதையடுத்து 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளான ஃபர்கானா ஹோக் பொறுமையாக ஆடி  30 (40) ரன்களும்,  முர்ஷிதா காதுன் 21 (25) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது வங்கதேச அணி 13.4 ஓவரில் 68/2 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.  அதன்பின் வந்த நிகர் சுல்தானா அவரால் முடிந்த அளவு 36 (29) ரன்கள் எடுத்த நிலையில், அவுட் ஆனார்..

இதற்கிடையே வந்த மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது வங்கதேச அணி.. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்..

Categories

Tech |