சூப்பர் 4ல் இன்று 2ஆவது போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணி மீண்டும் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 தொடரின் 2ஆவது மற்றும் கடைசி குரூப் ஏ ஆட்டத்தில் ஹாங்காங் அணிக்கு எதிராக மிக எளிதாக வெற்றி பெற்று சூப்பர் 4ல் பாகிஸ்தான் தனது இடத்தை பதிவு செய்தது. இந்த தொடரில் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. மேலும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற ஹாங்காங் அணியை வீழ்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த நிலையில், வீழ்த்தி முன்னேறி உள்ளது.
இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 4 க்கு தகுதி பெற்ற நிலையில், 4ஆவது மற்றும் இறுதி அணியாக பாகிஸ்தான் இடம்பிடித்தது. சூப்பர் 4 ரவுண்ட்-ராபின் முறையில் விளையாடப்படும், எனவே ஒவ்வொரு அணியும் மற்ற 3அணிகளை ஒரு முறை எதிர்கொள்ளும் மற்றும் 6 போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும்.
இலங்கை மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது. இந்தியா தனது 2 ஆட்டங்களில் பாகிஸ்தானையும், ஹாங்காங்கையும் தோற்கடித்ததைப் பின்பற்றி, குழு ஏவிலிருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய முதல் அணியாக மாறியது. அதேபோல் பங்களாதேஷுக்கு எதிரான த்ரில் வெற்றி பெற்று இலங்கை 3ஆவதாக முன்னேறியது. மேலும் ஹாங்காங்கை பாகிஸ்தான் 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 4க்கு தகுதியானது.
இதற்கிடையே சூப்பர் 4 முதல் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இந்நிலையில் சூப்பர் 4ன் 2ஆவது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. இந்திய அணியில் காயம் காரணமா ஜடேஜா விளக்கியுள்ளார். அதேபோல் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானி விலகியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதுவதால் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது..
ஆசிய கோப்பைக்கான இந்திய முழு அணி:
ரோஹித் ஷர்மா (கே), கேஎல் ராகுல் (து.கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல்
ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் முழு அணி:
பாபர் ஆசம், ஷதாப் கான், ஃபக்கர் ஜமான், ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, உஸ்மான் காதர், ஆசிப் அலி, முகமது ஹஸ்னைன், ஹசன் அலி