Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : பாகிஸ்தான் vs இலங்கை…… சாம்பியன் யார்?…. இன்று அனல் பறக்கும் இறுதிப்போட்டி…!!

ஆசிய கோப்பை 2022 இறுதிப் போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே செப்டம்பர் 11 ஆம் தேதி இரவு 07:30 மணி முதல் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில்  15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றது. கடந்த 2-ம் தேதி லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறினர்.‌ இதில் இலங்கை தான் விளையாடிய 3 சுற்றுகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அதன் பிறகு பாகிஸ்தான் அணி 2 வெற்றி 1 தோல்வி என இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் ஆசிய கோப்பை 2022 இறுதிப் போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று  (செப்டம்பர் 11 ஆம் தேதி) இரவு 07:30 மணி முதல் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் சதாப் கான், ஹரிஷ்ரவுப், நசீம்ஷா ஆகியோர் பந்துவீச்சிலும், குஷ்தில் ஷா, இப்திகார் அகமது, பகர்ஜமான், முகமது ரிஸ்வான் ஆகியோர் பேட்டிங்கிலும் நல்ல நிலையில் இருக்கின்றனர். அதேபோல தசுன் சானகா தலைமையிலான இலங்கை அணியில் பிரமோத் மதுஷன், தீக்ஷனா, ஹசரங்கா ஆகியோர் பந்து வீச்சிலும், ராஜபக்சே, பானுகா, குசல் மெண்டிஸ், நிசாங்கா ஆகியோர் பேட்டிங்கிலும் நல்ல நிலையில் இருக்கின்றனர்.

மேலும் ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை இதுவரை கோப்பையை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும், இந்தியா அதிகபட்சமாக 7 முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் களமிறங்கும் வீரர்கள் கணிப்பு :

 

பாகிஸ்தான் ப்ளேயிங் லெவன் vs இலங்கை:

முகமது ரிஸ்வான் (wk), பாபர் ஆசம் (c), ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, முகமது நவாஸ், ஷதாப் கான் (vc), நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன்.

இலங்கை ப்ளேயிங் லெவன் vs பாகிஸ்தான்:

பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (wk ), தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலக, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்ஷனா, தில்ஷான் மதுஷங்க.

 

 

 

Categories

Tech |