Categories
கிரிக்கெட் விளையாட்டு

#AsiaCup2022: பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் இன்று மோதல்…..!!!!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இதில் ஏ பிரிவில் சார்ஜாவில் இன்று நடக்கும் 6ப்வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நிஜாகத் கான் தலைமையில் ஆங்காங்கே எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டங்களில் இந்தியாவிடம் தோற்று இருந்தது. இந்தியா ஏற்கனவே சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. அதனை தொடர்ந்து சூப்பர்4 சுற்றுக்கு வரும் இன்னொரு அணி எது என்பது இன்றிய ஆட்டத்தில் தான் தெரியும்.

அதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக போராடி தோற்ற பாகிஸ்தான், சிறிய அணியான ஹாங்காங்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்தியாவுக்கு எதிராக 20 ஓவர் முழுமையாக தாக்குபிடித்ததுடன் 152 ரன்கள் வரை எடுத்த ஹாங்காங் அணியினர் பாகிஸ்தானுக்கு கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் பாகிஸ்தான் அணிகள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் ஒரு நாள் போட்டியில் 3 முறை மோதியுள்ளது. அனைத்திலும் பாகிஸ்தானே வெற்றி பெற்றிருக்கிறது.

Categories

Tech |