Categories
விளையாட்டு

ஆசிய பளுதூக்கும் போட்டி :திமுக எம்.எல்.ஏ. ராஜா வெண்கலம் வென்று சாதனை ….! குவியும் வாழ்த்து ….!!!

ஆசிய  பளுதூக்கும்  போட்டியில் இந்திய அணி சார்பில்  140 கிலோ எடைப்பிரிவில்  சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற  உறுப்பினர் ராஜா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் .

ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டி துருக்கியில் நடைபெற்றது .இதில் இந்திய அணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற  உறுப்பினர் ராஜா பங்கு பெற்றார் .இவர் சமீபத்தில் நடந்த  பளுதூக்கும் போட்டியில் தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தார் .இதையடுத்து ஆசிய அளவிலான  பளுதூக்கும் போட்டிக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டார் .

இந்நிலையில் ஆசிய  பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட அவர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் .இதில் 140 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட அவர் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் .இதையடுத்து நியூசிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ ராஜாவை நேரில் அழைத்து பாராட்டினார்.

Categories

Tech |