விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணி வீரர்கள் சூப்பர் 4 க்கு முன்னதாக விடுமுறையில் ஜாலியாக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆசியக்கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடர்ந்து 2 வெற்றிகளுக்குப் பிறகு, இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் செப்டம்பர் 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அவர்களின் போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் வெளியே சென்று கடற்கரையில் ஜாலியாக இருந்தனர். விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் பலர் சர்ஃபிங் செய்தும், பீச் வாலிபால் விளையாடுவதையும் காணும் கிளிப்பை பிசிசிஐயின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
வெள்ளியன்று (செப்டம்பர் 2 ஆம் தேதி) சூப்பர் 4 களில் தங்கள் போட்டிக்கு முன்னதாக, டீம் இந்தியா மைதானத்திற்கு வெளியே தங்கள் நாளை மகிழ்வித்தது மற்றும் பல்வேறு நீர் விளையாட்டுகளை விளையாடியது. ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி, பீச் வாலிபால் விளையாடுவதற்கு முன்பு சர்ஃபிங், கயாக்கிங் மற்றும் பல விஷயங்களை அனுபவித்தது. இந்த வீடியோவில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆர் அஷ்வின் ஆகியோருடன் கயாகிங்கை ரசிப்பதைக் காணலாம். விராட் கோலியும் நிதானமாக காட்சியளிக்கிறார். அதேசமயம் மற்றவர்களும் தங்கள் ஓய்வு நேரத்தை அனுபவித்தனர்.
“இது ஒரு விடுமுறை நாள், எனவே ராகுல் டிராவிட் சார் நாங்கள் சில வேடிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். நல்ல வேடிக்கையாக, நிம்மதியாக இருந்தது. நாங்கள் கொஞ்சம் ஜாலியாக இருந்தோம். எல்லோரும் எப்படி மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். இவை அனைத்தும் அணி பிணைப்பை உருவாக்க உதவுகிறது, ”என்று சாஹல் வீடியோவில் கூறினார்.
இந்தியா தனது போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை இறுதி ஓவர் த்ரில்லில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது, பின்னர் ஹாங்காங்கை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் ஃபோருக்கு முன்னேறியது. இப்போது, பாகிஸ்தான்-ஹாங்காங் ஆட்டத்தின் வெற்றியாளருக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். மற்றைய குழுவில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சூப்பர் ஃபோர் ரவுண்ட் ராபின் முறையில் விளையாடப்படும்.
When #TeamIndia hit 𝗨.𝗡.𝗪.𝗜.𝗡.𝗗! 👏
Time for some surf, sand & beach volley! 😎#AsiaCup2022 pic.twitter.com/cm3znX7Ll4
— BCCI (@BCCI) September 2, 2022