ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-தென்கொரியா அணிகள் மோதுகின்றன .
6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது.இதில் இந்தியா, ஜப்பான், மலேசியா உட்பட 6 அணிகள் பங்கேற்றுள்ளன .இதில் லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதனிடையே இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் 9-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 11-வது இடத்தில் உள்ள தென்கொரியா அணியுடன் மோதுகிறது.
இதற்கு முன்னதாக இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தியது.அதேபோல் தென்கொரியா ஒரு வெற்றி ,ஒரு தோல்வியை கண்டுள்ளது . இதனால் இரு அணிகளும் 2-வது வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.