விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அஸ்வினுக்கு பல வாய்ப்புகள் வரத் தொடங்கியது. அவ்வகையில் தற்போது அஸ்வின் “என்ன சொல்லப் போகிறாய்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு நடிப்பதற்காக அடுத்த இரண்டு படங்களில் அஸ்வின் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஆரம்பத்தில் எதார்த்தமாக இருந்த அஸ்வின் தற்போது பல கண்டிஷன்கள் போட்டு பந்தா காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது அஸ்வினுக்காக பிஆர்ஓ ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளார் ஆனால் தனக்கு குறிப்பிட்ட ஒருவர்தான் பிஆர்ஓ-வாக வர வேண்டும். இவர் வேண்டாமென அஸ்வின் மறுத்திருப்பது அவர் மீது இருந்த நம்பிக்கையை சினிமா வட்டாரத்தில் குறைக்கும் என கூறப்படுகிறது. மேலும் அவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில் இந்த பிஆர்ஓ தான் தனக்கு வேண்டும் என அவர் கண்டிஷன் போடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.