நித்தம் ஒரு வானம் படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”நித்தம் ஒரு வானம்”. இந்த படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, இந்த படம் குறித்து இயக்குனர் கார்த்தி அளித்த பேட்டியில், இதில் மூன்று கதாநாயகிகள் கதைக்கு தேவை என்பதால் இருக்கிறார்கள். இந்த படம் முடிந்து வெளியே வரும்போது சர்ப்ரைசாக ஒன்று இருக்கும் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.