ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் டெஸ்டுக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கு இடையே ‘ஆஷஸ்’ தொடர் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க தொடராகும்.
இதனால் இரு அணி வீரர்களும் இப்போட்டியில் வெற்றி பெற ஆக்ரோஷமாக செயல்படுவர். இந்நிலையில் நாளை தொடங்க உள்ள முதல் போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி : ஜோ ரூட் (கேப்டன்) ஸ்டூவர்ட் பிராட் , ரோரி பேர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஹசீப் ஹமீத், ஜேக் லீச், டேவிட் மலான் , ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் , மார்க் வுட்