இங்கிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் அஸ்டரா ஜெனகா தடுப்பூசி 79% திறன் வாய்ந்தது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலகநாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா,பிரான்ஸின் உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள்உலகம் முழுவதிலும் பாேடப்பட்டு வருகின்றது. மேலும் இந்தியா,பிரான்சின் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது இந்தியா ,ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கதொடங்கியுள்ளது .அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளில் அஸ்ட் ரா ஜெனகா கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது . அந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஆஸ்திரியா பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவரின் மரணம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால்அந்நாட்டில் அந்த தடுப்பூசிக்கு தடை விதித்துள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில்அந்த இந்த தடுப்பூசிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .அதனையேடுத்து இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்கள் பல பேருக்கு ரத்த கட்டு மற்றும் பக்க விளைவு சம்பந்தமான பல வித நோய்கள் ஏற்படு உள்ளன .
அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இல்லாமல் இந்த கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது என்று டச்சு மருத்துவ வாரியம் எச்சரித்து உள்ளது.அதனால் மார்ச் 28ஆம் தேதி வரை இந்த கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவித்தது . இந்நிலையில தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனம் மற்றும் உலக சுகாதார நிறுவனமும் இந்த தடுப்பூசியால் எவ்வித ரத்தக் கட்டுகள் ஏற்படுவதற்கான நிரூபணமும் இல்லை என்றுஆய்வில் தெரியவந்துள்ளது . தடுப்பூசி போட்டுக் கொள்வது முக்கியம் என்றும் அதனால் நாம் உயிர்கள் காக்க முடியும் என்று கூறியுள்ளது. அப்போது தான் இந்த கொராேனா வைரஸின் கடுமையான தாக்கத்தையும் வியாதியும் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்து உள்ளது .
இதனையேடுத்து அந்த நிரூபணத்தை ஐரோப்பிய மருத்துவ கழகம் ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளிட்ட 9 நாடுகளிலு ம் இந்த தடுப்பூசிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது . அதனால் ஐரோப்பிய மருத்துவ கழகம் உடனே தடுப்பூசியை பற்றி ஆய்வு ஒன்றை நடத்தியது அந்த ஆய்வில் கொரோனாதடுப்பூசி பாதுகாப்பு மற்றும் திறன் வாய்ந்தது என கடந்த வாரம் அறிவித்தது .அதனால் எந்தவித பக்கவிளைவுக்கான ஆபத்து இல்லை என்றும் தெரிவித்தது .
இந்நிலையில் 32 ஆயிரம் பேரிடம் 3 கட்ட பரிசோதனையை செய்துள்ளது. அதன் இறுதியில் இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் எடுத்துக்கொண்ட 21, 683 பேரிடம் திராம் போசிஸ் எனப்படும் ரத்தக் கட்டுகள் ஏற்படுவதற்கான ஆபத்து எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது. மேலும் இந்த பரிசோதனையில் அமெரிக்கா ,சிலி, மற்றும் பெரு ஆகிய நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது . அதில் அனைத்து வயதினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது . அவர்களில் 4 வார இடைவெளியில் 2 டோஸ் அல்லது 1 டோஸ் என்ற அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது என சி.என்.என் தெரிவித்து உள்ளது .மேலும் கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள் இந்த தடுப்பூசி 79 சதவீத திறன் வாய்ந்தது எனவும் கடுமையான வியாதி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் 100% திறன் வாய்ந்தது என்றும் பரிசோதனை முறையில் தெரிவித்துள்ளது.