Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் : ஒல்லி ராபின்சன் விலகல் ….! இங்கிலாந்து அணி அறிவிப்பு….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

இத்தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் காயம் காரணமாக அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக ஸ்டூவர் பிராட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து அணி : ஹாசீப் ஹமீத், ஸாக் க்ரௌலி, டேவிட் மாலன், ஜோ ரூட் (கே), பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், மார்க் வுட், ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Categories

Tech |