ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது . இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு ட்விட்டர் பக்கத்தில் ,’ ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை .இதனால் அவர் அடுத்த 7 நாட்கள் மெல்போர்னில் தனிமைப்படுத்த உள்ளார் .மேலும் ஆஸ்திரேலிய அணியில் உள்ள அனைத்து வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது . இந்நிலையில் டிராவிஸ் ஹெட் விரைவில் குணமடைந்து 5-வது டெஸ்ட் போட்டியில் பங்கு பெறுவார் என எதிர்பார்க்கிறோம் ‘ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.