ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது .இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறுகிறது.
இதில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி இந்த 3-வது டெஸ்டில் நிச்சயம் தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் அணியில் ரோரி பர்ன்ஸ், ஒல்லி போப், ஸ்டூவர் பிராட் ஆகியோர் நீக்கப்பட்டு ஜானி பேர்ஸ்டோவ், ஸாக் கிரௌலி, ஜேக் லீச்ஆகிய வீரர்கள் இடம் பிடித்துள்ளன.
இங்கிலாந்து அணி: ஹசீப் ஹமீத், ஸாக் கிரௌலி, டேவிட் மாலன், ஜோ ரூட் (கே), பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், மார்க் வூட், ஒல்லி ராபின்சன், ஜாக் லீச்,ஜேம்ஸ் ஆண்டர்சன்.