Categories
மாநில செய்திகள்

அசைவ பிரியர்களே! …. புரட்டாசியிலும் கிடுகிடுவென உயர்ந்த சிக்கன் விலை… என்ன காரணம் தெரியுமா….?

தமிழகத்தில் நாமக்கல், ஈரோடு, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் 25000 கறிக்கோழிகள் உற்பத்தி பண்ணைகள் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவான வி.சி.சி. தினமும் நிர்ணயம் செய்து வருகிறது. கொள்முதல் விலை என்பது தீபாவளி, கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் அதிகரிப்பதும் புரட்டாசி, கார்த்திகை, ரம்ஜான், ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் குறைவதும் வழக்கம். கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.83 என நிர்ணயம் செய்யப்பட்டது . அதனைத் தொடர்ந்து விலையில் மாற்றங்கள் கண்டு 25‌ ஆம் தேதியில் ரூ.102 உயர்ந்தது. ஆனால் 27ஆம் தேதி 16 ரூபாய் சரிந்து ரூ.86 என விலையை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதியிலிருந்து ரூ.88 உயர்ந்த நிலையில், 29ஆம் தேதி ரூ.10 சரிந்து ரூ.78 நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கிடையில் கடந்த 4 ஆம் தேதி ரூ.85, 5ஆம் தேதி ரூ.92, 6 ஆம் தேதி ரூ.97 என படிப்படியாக அதிகரித்தது. 3 நாட்களில் ரூ.19 கறிக்கோழி கொள்முதல் விலை உயர்ந்து பண்ணையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இது குறித்து கறிக்கோழி பண்ணையாளர்கள் கூறியது, புரட்டாசி விரதத்தால் 6 வாரம் முன்பே பண்ணை கோழி குஞ்சு விடுவதை நிறுத்தியதால் கறிக்கோழி உற்பத்தி சரிந்துள்ளது. மேலும் கொள்முதல் விலையில் இருந்து ரூ.15 வரை குறைத்தே வியாபாரிகள் கோழி வாங்குவதால் விலை குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பண்ணைகளில் குஞ்சுகள் விடுவதை குறைத்ததால் வார ரெண்டு புள்ளி 40 கோடி கிலோ உற்பத்தி செய்த நிலையில், தற்போது 1.70 கோடி கிலோ மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. கறிக்கோழி தேவையான அளவு இருப்பு இல்லை. தற்போது தேவை அதிகரிப்பால் கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. புரட்டாசி மாதம் முடிந்ததும், மேலும் விலை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |