மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் பேசி கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 16 வயது சிறுமி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி அந்த சிறுமி திடீரென மாயமானார். அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் சிறுமி கிடைக்காததால் உடனே மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி போனில் யாரிடமோ பேசியதாகவும், நான் படிக்க வைப்பதாக நன்றாக பார்த்துக் கொள்வதாக கூறி அந்த சிறுமியை ஒரு நபர் கடத்தியதாகவும் தெரியவந்துள்ளது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.