Categories
உலக செய்திகள்

திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் துவங்கும்… ஜப்பான் பிரதமர் உறுதி…!!

ஜூலை மாதம் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் கட்டாயம் நடக்கும் என்று ஜப்பான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளையும் கொரோனா என்னும் பெரும் தொற்று ஆட்டிப்படைத்து வருகின்றது. இதனால்  பல நாடுகளிலும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பல  நாடுகளில் கொரோனா காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் நடந்து கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஜப்பானில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்து வந்தது. இந்நிலையில் ஜூலை மாதம்  திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் யோஷி ஹிடெ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |