Categories
தேசிய செய்திகள்

ஆடுகளுக்கு காலிஃப்ளவர் விருந்து வைத்த விவசாயி… சொன்ன காரணம் என்ன தெரியுமா?

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அறுவடைக்கு தயாராக இருந்த காலிஃப்ளவரை விவசாயி ஒருவர்  ஆடுகளுக்கு விருந்தாக்கினார்.

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹுன்சூர் (Hunsur) அருகே இருக்கும்  ஹம்மிகே கிராமத்தைச் சேர்ந்தவர் தம்மன் கவுடா. இவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காலிஃபிளவர் பயிரிட்டிருந்தார்.

Image

இந்த நிலையில் தற்போது, காலிஃப்ளவர் நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாரானது. ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், காலிஃப்ளவரை சந்தைக்கு கொண்டுச் சென்று விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக, அவர் வேறு வழியில்லாமல் ஏராளமான ஆடுகளை வயலில் மேய விட்டு அவைகளுக்கு காலிஃப்ளவரை விருந்தாக்கினார்.
இது குறித்து விவசாயி தம்மன் கவுடா கூறுகையில், “காலிஃப்ளவரை சந்தைக்கு கொண்டுச் செல்லும் போது காவல்துறையினர் தன்னை தாக்குவார்களோ என்ற பயமும், கொரோனா வைரஸ் தொற்றிவிடுமோ என்ற அச்சமும் இருந்தது. அதனால் தான் என்னுடைய வயலில் பயிரிட்டிருந்த காலிஃபிளவர் அனைத்தையும் வீணாக்காமல் ஆடுகளாவது சாப்பிட்டு போகட்டும் என்று நினைத்தேன்” எனக் கூறினார்.

 

Categories

Tech |