Categories
சினிமா தமிழ் சினிமா

வெப் சீரிஸில் களமிறங்கும் ஆர்யா…. வெளியான புதிய தகவல்….!!!

சார்பட்டா வெற்றியை தொடர்ந்து நடிகர் ஆர்யா அடுத்ததாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இத்திரைப்படம் விமர்சனங்கள் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிப்பில் அடுத்ததாக எனிமி திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான விஷாலும் இணைந்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இனி தொடர்ந்து நடிகர் ஆர்யா அடுத்ததாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அடுத்தடுத்த அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |