தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விருமன் படத்தின் வெற்றியைடுத்து இயக்குனர் முத்தையா தற்போது ஆர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோயின் சித்தி இத்னானி ஹீரோயினாக நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ என தலைப்பு வைத்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.